28th November 2020

நாகப்பட்டினம் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற பின் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்.பி.நாயர் தகவல்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவராக பிரவீன்.பி.நாயர் பொறுப்பேற்றுக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், நாகப்பட்டினம் மாவட்டமானது, மீன்பிடித் தொழில், வேளாண்மை மற்றும் உப்பு உற்பத்தி ஆகியவற்றை முதன்மைத் தொழிலாகக் கொண்ட மாவட்டமாகும். கடலோர மாவட்டமான நமது மாவட்டத்தில், எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை எதிர்நோக்கி இருப்பதால், அதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும், விவசாய பெருமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு அரசின் அனைத்துத் திட்டங்களும் அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தேவைகள் மற்றும் சாலை வசதி போன்ற பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply