26th November 2020

மயிலாடுதுறை நகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் குப்பைகள் அகற்றம்

மயிலாடுதுறை நகராட்சியின் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தூய்மையே சேவை என்ற பெயரில் மயிலாடுதுறையின் பல்வேறு பகுதியில் மேடு போல் இருந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் சுத்தம் செய்த இடத்தில் “குப்பைகளை கொட்டாதீர்கள்” என்ற வாசகத்தை எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply