25th February 2021

சிதம்பரம், நடராஜர் கோவில் சுரங்க வடிகால் கண்டுபிடிக்கும் பணி துவக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவிலின் சபையை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால், சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க வடிகாலை கண்டுபிடித்து, துார் வாரும் பணியை, நகராட்சி ஊழியர்கள் துவங்கினர்.

கடலுார் மாவட்டத்தில் பெய்த கன மழையால், சிதம்பரம் நடராஜர் கோவிலின் சிவகங்கை குளம் நிரம்பி, பொற்கூரை பகுதி முழுதும், இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இக்கோவிலில் இருந்து தண்ணீர் வடிய, பராந்தக சோழன் வடிவமைத்த சுரங்க வடிகால், பராமரிப்பு இல்லாமல் போனதே காரணம் என கண்டறியப்பட்டது.இதையடுத்து, சுரங்க வடிகால்களை தோண்டி, மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ், வடிகாலை பார்வையிட்டு, சீரமைக்க உத்தரவிட்டார். சிதம்பரம் நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வின் தலைமையில், ஊழியர்கள் நேற்று பணிகளை துவங்கினர். கோவிலின் வடக்கு கோபுர வாசலில் இருந்து, தில்லை காளி கோவில் குளம் வரை, தண்ணீர் வடியும் சுரங்க வடிகாலில், 11 இடங்கள் இறங்கி பணியாற்றும் அளவில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அதில், ஒன்பது இடங்களை, நகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மீதமுள்ள இடங்களை கண்டுபிடிக்கும் பணி, முடுக்கி விடப்பட்டுள்ளது.

கோவிலில் இருந்த தண்ணீர் வெளியேறும் வடக்கு வீதியிலேயே அடைப்பு இருந்ததை கண்டறிந்து, சாலையை பெயர்த்து, துார் வாரும் பணி நடக்கிறது.

SOURCE

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts