18th October 2021

மாமல்லபுரம் ரேடிசன் புளூ ரிசார்டை இடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

டெல்லி: விதிகளை மீறி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், கட்டிடங்கள் கட்டியதாக மாமல்லபுரத்தில் உள்ள பிரபல ரேடிசன் புளூ ஹோட்டலை இடிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல ஹோட்டல் நிறுவனமான ரேடிசன் ப்ளூ குழுமத்தின் ரிசார்ட் மாமல்லபுரத்தில் உள்ளது. இந்த நிறுவனம், விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் மீனவர் நலச்சங்க தலைவர் செல்வராஜ் குமார் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த புகாரின் மீது, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வந்தது. அதைத்தொடர்ந்து, ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை 2 மாதங்களுக்குள் அந்நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஹோட்டர் நிர்வாகம் இடிக்கவில்லை என்றால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இடித்து அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்காக தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு ரேடிசன் ப்ளூ நிர்வாகம் ரூ. 10 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page