28th November 2020

நவராத்திரி பிரம்மோற்சவத்தையும் தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு: திருப்பதி

திருமலையில் அக்.16ம் தேதி முதல் நடக்கவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய வைபவம் பிரம்மோற்சவம். பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவம். எப்போதும் லட்சகணக்கான பக்தர்கள் புடைசூழ ஒரு பெரிய திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை கோவிட் -19 விதிமுறைகளுக்கு உள்பட்டு அனைத்து கோயில்களிலும் உற்சவங்களும், விழாக்களும் நடந்து வருகிறது.

மேலும், திருமலையில் இந்தாண்டு இரு பிரம்மோற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்து, கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் மாடவீதி புறப்பாடு இல்லாமல் ஏகாந்தமாகக் கோயிலுக்குள் தனிமையில் நடத்தப்பட்டது. ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் குறைந்த அளவில் பக்தர்களை அனுமதித்து நடத்த தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

ஆனால், தற்போது கரோனாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் பெருகி வரும் நிலையில் பக்தர்களை திருமலைக்கு அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள், மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தி மேற்பட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்தனர்.

அதில் பக்தர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அக்.16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தையும் தனிமையில் நடத்த தேவஸ்தானம் அதிகாரிகள் குழு முடிவு செய்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டது

SOURCE

More News

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts