27th November 2020

சீர்காழி அருகே, காரில் கடத்தி வந்த 1,300 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் – டிரைவர் கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட புங்கனூர் கூட்டு சாலையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த காரை வழிமறித்து நிறுத்தினர். அப்போது அந்த காரில் வந்த 3 பேர் தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் கார் டிரைவரை மடக்கி பிடித்து, காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 1,300 சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், சாராய பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

காரை ஓட்டி வந்த திருத்துறைப்பூண்டி மங்கலநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டியன் (வயது 32) என்பவரை கைது செய்தனர். மேலும் காரில் இருந்து தப்பி ஓடிய செல்லூர் கிராமத்தை சேர்ந்த விஜயா, விளாங்குடி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன், சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

SOURCE

More News

கோமல் அன்பரசன் ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

Leave a Reply