கடும் எதிர்ப்பு எதிரொலி: தமிழில் புதிய கல்விக் கொள்கை வெளியானது

17 மொழிகளில் புதிய கல்விக் கொள்கையின் உள்ளூர் மொழிபெயர்ப்பு வெளியாகி, தமிழ் மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டது. இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இன்று தமிழ் மொழிபெயர்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு, 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காகப் பாடமுறை மாற்றப்படும், மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும், மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும். 6-ம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டிருந்தன.

ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. இதற்கான பிராந்திய மொழிபெயர்ப்புகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், 17 பிராந்திய மொழிகளில் கல்விக் கொள்கையின் மொழிபெயர்ப்பு வெளியாகி இருந்தது.

கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நிலையில், தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு இடம்பெறவில்லை. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று தேசிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 155 பக்கங்களுடன் கூடிய மொழிபெயர்ப்பை மத்திய அரசின் சார்பில் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

You cannot copy content of this page