20th September 2021

தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்.!!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஆகஸ்ட் 23 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுடன் 23.8.2021 காலை 6.00 மணி வரை மேலும்‌ இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

கடந்த வாரத்தில்‌ கூட்டம்‌ அதிகமாக கூடக்கூடிய நிகழ்வுகள்‌ மற்றும்‌ சந்தைப்‌ பகுதிகளில்‌ அந்தந்த மாவட்ட ஆட்சித்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையர்கள்‌ / காவல்‌ துறையினரால்‌ மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால்‌ நோய்த்‌ தொற்று பரவல்‌ கட்டுப்பாட்டுக்குள்‌ இருந்து வருகிறது. முதலமைச்சர்‌ துவக்கி வைக்கப்பட்ட மாநிலம்‌ தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ பொது மக்களிடையே கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வினை அதிகரித்து வருகிறது.

இறைச்சி மற்றும்‌ மீன்‌ சந்தைகளில்‌ மக்கள்‌ கூடுவதை தவிர்க்கும்‌ பொருட்டு திறந்தவெளியில்‌ தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ கூடக்கூடிய இடங்களில்‌ கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல்‌ பின்பற்ற வேண்டும்‌.

கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌, வாடிக்கையாளர்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ கை சுத்திகரிப்பான்‌௧ள்‌ கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல்‌ வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்‌.

கடைகளில்‌ பணிபுரிபவர்களும்‌, வாடிக்கையாளர்களும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

அனைத்து கடைகளும்‌, உரிய காற்றோட்ட வசதியுடன்‌செயல்படுவதோடு, கடைகளில்‌, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்‌ வகையில்‌ ஒரே நேரத்தில்‌ அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

 

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page