28th February 2021

கொடைக்கானலில் புது முயற்சி.. கருப்பு கேரட் விளைவித்த விவசாயி!

பொதுவாக கேரட்டுகள் ஆரஞ்சு வண்ணத்தில்தான் பார்த்திருப்போம். ஆனால், கருப்பு வண்ண கேரட்டும் தமிழகத்தில் பரவலாக பயிரிடப்படுகிறது. கொடைக்கானலில் கருப்பு வண்ணத்திலான கேரட்டை விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியை சேந்த ஆசீர் என்ற விவசாயி மலைக்காய்கறிகளை விவசாயம் செய்து வருகின்றனர், ஆன் லைன் மூலம் கருப்பு நிறத்தில் விளையக்கூடிய கேரட் விதைகளை வாங்கி தன் 5 சென்ட் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் கருப்பு கேரட்டை பயிரிட்டார். வழக்கமான ஆரஞ்சு கேரட்டை போலவே இந்த கருப்பு கேரட்டுகள் 90 நாட்கள் பயிர்தான். சீனாதான் இந்த கேரட்டின் பூர்வீகம் என்று சொல்லப்படுகிறது. இனிப்புடன் லைட்டாக காரம் கலந்து சுவையுடன் இந்த கேரட் இருக்கும்.

பொதுவாகவே , கேரட்டுகள் குறைந்த கலோரிகள் உடைய காயாகும். அதிகளவு நார்ச்சத்துக்கள், வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைச்துள்ளதாக இருக்கும். மற்ற கேரட்டுகளை விட கருப்பு கேரட்டில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளது. 100 கிராம் கருப்பு கேரட் சாப்பிட்டால் அதிலிருந்து உங்களுக்கு கிடைப்பது 36 கலோரிகள் மட்டுமே. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் கருப்பு கேரட்டை சேர்த்துக்கொள்ளவது நல்லது. மற்ற கேரட்டுகளை விட அதிக சுவை கொண்ட கேரட்டாகும்.கருப்பு கேரட்டில் அதிகம் செறிவூட்டப்பட்ட அந்தோசியனின் (anthocyanin) என்ற நிறமி அதிகமாக இருப்பதோவே அதன் வண்ணம் கருப்பாக உள்ளது.

கருப்பு கேரட்டில் நார்ச்சத்து அதிகம். இதனால், செரிமான உறுப்புகள் வலு பெறும். வாயுத்தொல்லை, மலச்சிக்கல் , வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வராமல் கருப்பு கேரட் தடுக்கிறது. கருப்பு கேரட் உண்டால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மனிதர்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய பாக்டரீயாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடக் கூடிய கூடிய திறன் கருப்பு கேரட்டுக்கு உள்ளது. இதில், வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் திறம்பட செயல்பட உதவி செய்கிறது. வெள்ளை அணுக்கள் நன்றாக செயல்பட்டால்தான் நோய்க் கிருமிகளிடமிருந்து மனித உடலை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும். கருப்பு கேரட்டில் இருக்கும் அந்தோசியனின் (anthocyanin) என்ற நிறமியால் புற்றுநோய் செல்களை எதிர்த்து உடல் போராட முடியும். பார்வைத்திறனை திறனை அதிகரக்கவும் கருப்பு கேரட் உதவுகிறது. கருப்பு கேரட்டை ஜூஸாக எடுத்துக் கொள்வதும் நல்லது. அதே வேளையில் கருப்பு கேரட்டை அதிகமாக உண்டால், தோல்நோய் அலர்ஜி, ரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts