18th October 2021

‘இரவு ஊரடங்கு’ – கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்! காவல் ஆணையர் அறிவுரை!

இரவு ஊரடங்கு மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள். அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தற்போது பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 20-ஆம் தேதி இரவு 10 மணியிலிருந்து இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து சென்னையில் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 200 வாகன சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், போலீஸ் வாக்கி டாக்கி மூலம் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இரவு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள். அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். கடைகள் மூடப்பட்டு உள்ளதா என்பதை கண்காணியுங்கள். மருத்துவத் தேவை மற்றும் பிற அவசர தேவைகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்களை பரிசோதித்து அவர்களை செல்வதற்கு அனுமதி கொடுங்கள் என்றும், தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page