நிவர்- 117 கி.மீ வேகத்தில் தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு சென்னையில் மிக கன மழை பெய்யும்


நிவர் புயல் காரணமாக, சென்னை நகரில் மிக கன மழை பெய்யும் என்று அரசு மற்றும் தனியார் வானிலை மையங்களின் கணிப்புகள் உறுதியாகச் சொல்கின்றன.
இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள, காற்றழுத்த தாழ்வு மண்டலம், (நிவர் என்ற பெயரில்) புயலாக மாற உள்ளது. இது தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தீவிர புயல் என்பதால், சுமார் 89 கி.மீ முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாம்.