நிவர் புயலால் வீடிழந்த குடும்பத்திற்கு மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி.


விழுப்புரம் மாவட்டம் வீடூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் முத்துலட்சுமி தம்பதி மற்றும் அவரது 2 மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் நிவர் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வீடிழந்து தவித்துவந்த நிலையில், மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு முதற்கட்ட உதவியாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது. அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார், வீடிழந்த தம்பதிகளுக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களது கூரையை சரி செய்ய நிவாரண தொகையை வழங்கினார். மேலும் அவர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் வகையில் அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய வீடு ஒன்றை கட்டித்தருவதாகவும் கூறியிருக்கிறார். ஆதரவு யாருமின்றி அடுத்த வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்த ஆறுமுகம் குடும்பத்திற்கு தக்க நேரத்தில் உதவி செய்த அன்பு அறக்கட்டளையை ஊர்மக்களும் பாராட்டி வருகின்றனர்.