நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி


நிவர் புயல் காரணமாக நாளை ஒருநாள் அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மகாபலிபுரம் -காரைக்கால இடையே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று எழிலகத்தில் புயல் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நிவர் புயல் காரணமாக நாளை (புதன்கிழமை) தமிழகம் முழுவதுமுள்ள அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார்.