20th January 2021

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

வங்காள விரிகுடா கடலில் உருவாகிய நிவர் புயல் தமிழகத்திலோ பாண்டிச்சேரியிலோ கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசின் வேளாண்மை துறை செயலாளர் சுகன்தீப்சிங் பேடி, பயிர் காப்பீடுகளைச் செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்து அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நேற்றும் இன்றும் பயிர் காப்பீடு பணிகள் நடைபெற்று வருகின்றன. காப்பீடு செய்வதற்கான பல்வேறு விவரங்களுடன் அரசால் அனுமதிக்கப்பட்ட கணினி மையங்களில் பயிர் காப்பீட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்களுக்குள் பயிர் காப்பீடு செய்வது என்பது இயலாத காரியம். குறிப்பாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியை பொருத்த வரை மயிலாடுதுறை, குத்தாலம்,மணல்மேடு பகுதிகளைச் சார்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நில விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு பயிர் காப்பீடு செய்ய மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள கணினி மையங்களுக்கு ஒரே நேரத்தில் படையெடுத்தனர். ஏற்கனவே நூற்றுக்கணக்கான பேர் தங்களிடம் விண்ணப்ப மனுக்களை கொடுத்து சென்றுள்ளதாகவும் புதிதாக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் சொல்லி கணணி மையத்தில் விவசாயிகளை திருப்பி அனுப்பி வருகிறார்கள். அதனால் பெருத்த ஏமாற்றம் அடைந்த பல்வேறு விவசாயிகள் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றார்கள்.

தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளர் சுகன்தீப்சிங் பேடி இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்து தருவதுடன் பயிர் காப்பீட்டு விண்ணப்பங்களை கிராமப்புறங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடமோ, வட்டாட்சியரிடமோ சமர்ப்பிக்கலாம் என்ற வகையில் திருத்தம் செய்து உதவிட வேண்டும். விண்ணப்பம் கொடுக்கின்ற அத்தனை பேருக்கும் காப்பீடு கிடைக்கின்ற வகையில் வழிவகை செய்திட வேண்டும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற நிலை ஏற்படுவதற்கு முன்னர் இப்பணிகளை தமிழக அரசின் வேளாண்மை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து விவசாயிகளின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

More News

தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்கும் அன்பு அறக்கட்டளை சப்தமில்லாமல் சாதித்துவருகிறது.

admin See author's posts

வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

admin See author's posts

நாடு முழுவதும் 2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

admin See author's posts

இந்திய ராணுவத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது பைக் ஆம்புலன்ஸ் சேவை

admin See author's posts

மயிலாடுதுறை பாண்டூர் கிராமத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவிகளை வழங்கினார் விஜிகே செந்தில்நாதன்

admin See author's posts

மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரயிலை முதல் நடை மேடையில் இருந்து இயக்க முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

கடலில் காற்றழுத்த தாழ்வு… மழை மேலும் வலுக்கும்..!

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- ஸ்டாலின்

admin See author's posts

லாரியை முந்தியபோது… பேருந்தில் பாய்ந்த மின்சாரம்! – 4 பேரை பலி கொண்ட சோகம்

admin See author's posts

பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே பிரைவசி பாலிசி மாற்றங்கள் பொருந்தும் – வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

admin See author's posts