எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்


காலமும் சரியில்லை, களமும் சரியில்லை கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டதாக கூறிய இலட்சிய திமுக கட்சி தலைவர் டி. ராஜேந்தர், இந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏபரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டி, அரசியல் களத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
முன்னதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட காட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திரைத்துறை நடிகை, நடிகர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இலட்சிய திமுக கட்சி எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் டி. ராஜேந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி. ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில், “கொள்கையை சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக் காலம். கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்பது இந்தக் காலம். காலமும் சரியில்லை, களமும் சரியில்லை கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன். இந்த தேர்தலில் எங்கள் இலட்சிய திமுக யாரையும் ஆதரிக்கவும் இல்லை, அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க