நீட் தேர்வு ஒத்திவைப்பு இல்லை- உச்ச நீதிமன்றம்

நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மேலும் சில மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதி அளித்த தீர்ப்பினை மறுஆய்வு செய்யக்கோரியும், நீட் தேர்வினை ஒத்திவைக்கக் கோரியும் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தன. இந்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், நடந்து முடிந்த ஜேஇஇ தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் கரோனா பரவல் காரணமாக பங்கேற்கவில்லை, எனவே நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுக்கள் சில தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ‘ஏற்கெனவே பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள்கூட தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. நீட் தேர்வை ஒத்திவைக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறி இந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SOURCE

More News

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலையில் பணி!

admin See author's posts

இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளை களைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்- அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

admin See author's posts

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

Leave a Reply