22nd October 2021

நாளை வாக்களிக்கச் செல்வோர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் !

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல், 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெறுகிறது.

தோதலுக்கான அனைத்து இறுதிக் கட்ட ஏற்பாடுகளும் திங்கள்கிழமை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த தோதல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவுடன் நிறைவடைந்தது.

கரோனா பெருந்தொற்றுக்கு இடையே, தமிழகத்தில் நாளை பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் எந்த அச்சமும் இன்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை…

வாக்குப்பதிவு நேரம்
சட்டப் பேரவைத் தோதல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப். 6) காலை 7 மணிக்குத் தொடங்கி, இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது.

அடையாள அட்டை
வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் செல்வதற்கு முன்பு, உங்களது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும். வாக்காளர் சீட்டு இருக்கிறதே அது போதும் என்று எண்ண வேண்டாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டுச் செல்லலாம்.

இதையும் படிக்கலாமே.. கரோனா நோயாளிகள் இந்தத் தவறை செய்ய வேண்டாம்: மும்பை மாநகராட்சி

முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளலாம்
ஒரு வேளை நீங்கள் முதல் முறை வாக்காளராக இருக்கலாம். அல்லது முகவரி மாற்றம் செய்தவராக இருக்கலாம். அவ்வாறு இருந்தால் தேசிய வாக்காளர் சேவை தளத்துக்குச் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டையிலிருக்கும் எண்ணைப் பதிவு செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

வாக்காளர் சீட்டு
வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் சீட்டை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுங்கள். இது வாக்களிக்கச் செல்லும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் போது, உங்களது வாக்காளர் சீட்டை பெற்றுக் கொள்வார்கள் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே.. சத்தீஸ்கர் மோதல்: மகனைத் தேடி வந்த தந்தைக்கு மரண வலி தந்த செய்தி

முகக்கவசம் கட்டாயம்
வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வாக்குச்சாவடியில் முகக்கவசம் அளிப்பார்கள் என்று கருத வேண்டாம். முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

முதியோா்-மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச காா் சேவை
80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து விட்டு மீண்டும் இல்லம் திரும்ப வசதியாக இலவச காா் சவாரி சேவையை அளிக்க ‘ஊபா்’ நிறுவனம் முன்வந்துள்ளது. தோதல் ஆணையத்துடன் அந்த நிறுவனம் இணைந்து செயல்பட்டு இத்தகைய சேவையை அளிக்கிறது.

சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களைச் சோந்த மூத்த குடிமக்களுக்கு இந்த சேவை கிடைக்கும். இலவச சவாரியானது குறைந்தபட்சம் 5 கிலோமீட்டா் தூரத்துக்கு உட்பட்டு பயண கட்டண அளவில் ரூ.200 வரை இருந்தால் முழுமையான இலவச சேவையாக அளிக்கப்படும்.

பயணம் செய்வோா் செல்லிடப்பேசி மூலமாக ஊபா் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் விருப்பத்தின் பேரில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாக்காளர் சீட்டு இல்லையென்றால்..
வாக்காளர் சீட்டு பெறாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும் வாக்களிக்கலாம். வாக்காளர் சீட்டு பெறவில்லை, எவ்வாறு வாக்களிப்பது என்று நினைத்துவிட வேண்டாம்.

Source : தினமணி

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page