28th November 2020

கேரம் விளையாட்டில் மாநில அளவில் விளையாட தேர்வு, மாவட்ட அளவில் முதலிடம்!

18.10.2019 அன்று நாகை மாவட்ட அளவில் S.D.A.F சார்பாக கேரம் விளையாட்டுப் போட்டி நாகை விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் K.G To V பெண்கள் ஒற்றையர் பிரிவில் E.நதிஷாமாதுரி V-B முதல் இடத்திலும், ஆண்கள் பிரிவில் B.முகம்மது அக்ரம் V-A முதல் இடத்திலும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் R.ராகுல் கண்ணன் V-A, R.தினேஷ் குமார் V-A ஆகியோர் முதல் இடத்திலும் வெற்றி பெற்று சான்றிதழும் ரூ 500 க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

மேலும், VI To XII ஆண்கள் இரட்டையர் பிரிவில் M.முகம்மது மஜ்கர் அலி XII-C, R.ராஜேஷ் கண்ணன் XII-B ஆகியோர் முதல் இடத்தில் வெற்றி பெற்று சான்றிதழும் தலா ரூ.1000 காசோலையும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அனைவரும் திண்டுக்கலில் நடைபெறும் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் Rtn.V.இராமன், முதல்வர் R.குமார், உடற்க்கல்வி ஆசிரியர் R.சரவணக்குமார், S.சுதா ஆகியோர் பாராட்டினர்.

Leave a Reply