மயிலாடுதுறை, வள்ளாலகரம் ஊராட்சியில் இணையவழி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்


மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் , வள்ளாலகரம் ஊராட்சியில் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஞான.இமயநாதன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்து புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 150 க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணையதளம் வாயிலாக தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் இராம சேயோன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவதாஸ் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் தருமபுரம் ராஜேந்திரன், மணக்குடி பெரு வீரமணி,ஒன்றிய கவுன்சிலர் மோகன், அ.அப்பர்சுந்தரம், இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம ஊராட்சி திமுக நிர்வாகிகள் ஏஜி கோபு ,கார்த்திகேயன், கோபாலகிருஷ்ணன், கண்ணுசாமி, பாபு சுதந்திரதாஸ், பக்கிரிசாமி, திருவடி, இளமுருகுசெல்வன், பால்ராஜ், தேவிகா, அமுதாநடராஜன், ஒன்றிய மாணவரணி ரூரல் புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.