மயிலாடுதுறை, நலத்துக்குடி ஊராட்சியில் இணையவழி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மயிலாடுதுறை நல்லதுக்குடி ஊராட்சியில் இணையவழி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் துவக்கி வைத்தார்.
திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடை பெற்று வரும் வேளையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து திமுக உறுப்பினர். சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.மயிலாடுதுறை அருகே உள்ள நல்லதுக்குடி ஊராட்சியில் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஞான இமயநாதன் தலைமையில் மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் இணையவழி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்து 100 நபர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை உடனடியாக வழங்கினார். தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஞான இமயநாதன் தலாமியல் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகமணி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் ராம சேயோன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அலெக்ஸாண்டர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவதாஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், ஒன்றியக்குழு மாவட்ட குழு உறுப்பினர்கள், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிமுகவிலிருந்து உத்திராபதி, ரவி, கோபிநாத், சங்கர், மல்லிகா, ராசாத்தி என 20கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

SOURCE : Dhinakaran

More News

இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் – எல்.முருகன்

admin See author's posts

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்

admin See author's posts

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: முதல் கட்டமாக ஆறு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

admin See author's posts

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!

admin See author's posts

பாமக தேர்தல் அறிக்கை!

admin See author's posts

அதிக டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய இந்திய கேப்டன்: தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

admin See author's posts

மயிலாடுதுறை நகராட்சியால் சாலையோரம் கொளுத்திவிடப்பட்ட குப்பையால் வாழைமரங்கள் தீக்கிரையானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

admin See author's posts

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது

admin See author's posts

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் – கமல்ஹாசன்

admin See author's posts

மயிலாடுதுறையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள் அணிவகுப்பு

admin See author's posts