ஊரடங்கால் நலிவுற்ற முதியவர்களுக்கு பாரம்பரிய நவதானிய சத்து பொருட்கள் மற்றும் பழங்கள் வழங்கிய பழையகூடலூர் ஊராட்சி

கொரோனா தொற்றுநோய் தடுப்பு ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய நலிவுற்ற முதியவர்களுக்கு உதவிடும் வகையில் நாகை மாவட்டம், பழையகூடலூர் ஊராட்சி சார்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது.

கிராமப்புற பகுதிகளில் உள்ள முதியவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையிலும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலும் நவதானிய இயற்கை சத்துமாவு, பிரட், பிஸ்கட், அவல், சோளம் மற்றும் பழங்கள் போன்ற பத்துக்கும் மேற்பட்ட சத்து பொருட்களை ஊராட்சிமன்றத் தலைவர் இரா.பாண்டியன் முதியவர்களுக்கு வழங்கினார். ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் முத்துலெட்சுமி குமார், ஊராட்சி உறுப்பினர்கள் ஜீவாராணி நாகூரான், உஷா செல்வராஜ், ராமநாதன், சாந்தகுமாரி இளங்கோவன், செந்தமிழ்செல்வி பாலு, ஊராட்சி செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You cannot copy content of this page