மயிலாடுதுறை செம்பனார்கோவில் நத்தம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு


செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நத்தம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார். இதில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் விஜிகே செந்தில்நாதன் செம்பை வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் டி சுந்தர்ராஜன், நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ப்ரீத்தி செந்தில்குமார் மற்றும் மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியயோர் கலந்து கொண்டனர்.