தமிழகத்தில் வரும் 16ந்தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு: இரு துறை அமைச்சர்களும், அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை


தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க இரண்டுவார காலம் அவகாசம் உள்ள நிலையில் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இரு துறைகளின் அமைச்சர்களும் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளனர். வகுப்பறைகளில் கிருமிநாசினியை தெளித்து சுத்தப்படுத்துதல், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.