கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரிடம் ரூ. 5 லட்சத்தை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் வழங்கினார்


மயிலாடுதுறை மாவட்டத்தில் கோரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் வழங்கி வருகிறார். இந்நிலையில் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம், நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தந்தார். அப்போது திருவாரூரில் முதலமைச்சர் பழனிசாமியை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன் நேரில் சந்தித்து கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 5 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.