மயிலாடுதுறை, மணல்மேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை 45 லட்சம் மதிப்பில் கைத்தறி துணிநூல் அமைச்சர் ஓ எஸ் மணியன் திறந்து வைத்தார்


மயிலாடுதுறை, மணல்மேடு பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் வேளாண் சட்டத்திற்கு எந்த இடத்தில் குறை இருக்கிறது என ஸ்டாலின் கூறுகிறார் தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை ரூபாய் 45 லட்சம் மதிப்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து தமிழக அரசால் அனைத்து மாவட்டங்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள ஐந்து 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை செய்ய துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற அதிமுக உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், சீர்காழி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் பி.வி.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு கூடுதல் விலையை மிக விரைவில் அறிவிப்பவர் எனவும், வேளாண் சட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சிகள் குறை கூற என்ன பிரச்சனை என்று கூற மறுக்கிறார்கள். விவசாயிகள் காலில் வெந்நீர் ஊத்தி விட்டனர் மத்திய அரசு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதார விலை அரசு நிர்ணயித்த விலைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எந்த இடத்தில் குறை இருக்கிறது என ஸ்டாலின் கூறுகிறார். தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் ஓ எஸ் மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.