24th November 2020

சீர்காழியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கையில் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ஊராட்சி மன்றங்களுக்கு அரசு நிதி வழங்கக்கோரி சீர்காழியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கையில் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு செய்யலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரியசாமி, முல்லைவேந்தன், சுப்பரவேல், லெட்சமி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர்கள் கையில் சட்டி ஏந்தி கோஷமிட்டனர். கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி நிதியினை அரசு உடனடியாக வழங்க வேண்டும். புதிதாக பதவியேற்ற இதுநாள் வரை வைக்கப்பட்டுள்ள 7 மாத மானிய நிதி குழு மானிய தொகையை உடனே வழங்க வேண்டும். வளர்ச்சி நிதிகளில் மாநில அரசு கட்சி பாகுபாடு காட்டக்கூடாது. குடிநீர் தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்ற மாதமாதம் நிதி வழங்க வேண்டும். ஊராட்சி மன்றத்திற்கு வரக்கூடிய வளர்ச்சி நிதியை வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யக்கூடாது. ஊராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமணிராஜ், பத்மா, சுகந்தி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SOURCE : Dhinathanthi

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts