தலைவலிக்கான சித்த மருத்துவம்

அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.

முள்ளங்கிச் சாறெடுத்துப் பருகிவந்தால் தலைவலி ஜலதோஷம் இருமல் ஆகியவை குணமாகும்.

சுக்கு,மிளகு,திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகள் I ஒவ்வொன்றிலும்
ஐந்து கிராம் வீதம் சேர்த்து தினமும் காலை, மாலை, வேளைகளில் சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல் குணமாகும்.

திருநீற்றுப் பச்சிலை சாறு,தும்பைச் சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நாசியில் உரிஞ்சினால் தலைவலி தீரும் .

வெற்றிலைக் காம்பு லவங்கம்,ஆலரிசி ஆகியவற்றை சம அளவில் எடுத்து பால் கலந்து சூடாக்கி நெற்றிப் பொட்டில் உச்சந்தலையிலும் தடவினால் தலைவலி குணமாகும்.

சீரகம் ,கொத்தமல்லி ,சீந்தில் கொடி ஆகியவற்றை சம அளவு எடுத்துத் பொடி செய்து அவற்றை 300 மில்லி நீரில் போட்டு பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடி, திறந்த வெளியில் இரவு முழுவதும் வைக்கவும். காலையில் அதை நன்கு கசக்கி பிழிந்து தண்ணீரை வடிகட்டி கற்கண்டு சேர்த்து, காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட்டு வரவும். எத்தகைய தலைசுற்றல் குணமாகும்.

விரலி மஞ்சளினை விளக்கெண்ணையில் மூக்கி விளக்கில் காட்டி அதனைச் சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்சினால் தலைவலி குணமாகும்.

நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி சாறு 500 மில்லி லிட்டர் எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூன்று நாள் வெயிலில் காய வைத்து அதன் பின் தேங்காய் எண்ணெய்க் கொதிக்க வைத்துக்கொண்டு அதில் நெல்லிச்சாறு கலந்து கொதிக்கயில் மூக்கில் நுகர தலைவலி அகலும் .

தலைச் சுற்றல் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் ஒரு நெல்லிக்காய் சாறை குடித்தால் சிறிது நேரத்திலேயே குணம் கிடைக்கும்.

பச்சை இஞ்சி சாறு தேன் கலந்து தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.
கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைசுற்றல் நிற்கும்.

குப்பைமேனி சாற்றை தலையில் தேத்தால் தலைவலி குணமாகும் ஆதண்டை இலை கொடியை இடித்து எண்ணெயில் காய்ச்சி குளித்து வந்தால் கபால வாயு ,தலைவலி குணமாகும் .

மஞ்சள்,பூண்டு இரண்டையும் தாய்ப்பால்விட்டு அரைத்து பற்று போட்டால் தலைவலி குணமாகும்
ஒற்றை தலைவலி ஏற்ப்பட்டால்,சிறுகீரை வேர்,மிளகு, மஞ்சள் மூன்றையும் நறுக்கிநல்லெண்ணெய் போட்டு காய்ச்சி குளித்தால் குணமாகும்

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page