25th November 2020

ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய தமிழ் படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

ஹவுஸ் ஓனர் மற்றும் ஒத்த செருப்பு ஆகிய திரைப்படங்கள் மத்திய அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் வெளியான படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது அறிவித்தது.

இதன்படி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி கடந்த 2019ல் வெளியான ஹவுஸ் ஓனர் படம் தமிழின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இதேபோல் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கும் மத்திய அரசு விருதை அறிவித்தது. பார்த்திபன் மட்டுமே நடித்திருக்கும் இந்த படம் பெருமளவில் பேசப்பட்ட நிலையில் இந்த படத்திற்கும் மத்திய அரசு விருது கிடைத்தது. இந்நிலையில், விருது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. “2020 ல் மகிழ்ச்சியான தருணம் இது” – இயக்குநர் பார்த்திபன் தேசிய அளவில் தேர்வான படம் என்றால் மகிழ்ச்சி தான்.. ஆனால் பிராந்திய மொழிகள் என்ற அளவில் ஒத்த செருப்பு படத்துக்கு விருது கிடைத்திருந்தால் அது வருத்தமே என அந்த படத்தின் இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

“விருது கிடைக்கும் என நான் நினைக்கவில்லை” – லட்சுமி ராமகிருஷ்ணன் சின்ன பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஹவுஸ் ஓனர் படத்துக்கு மத்திய அரசு விருது அறிவித்திருப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தருகிறது என அந்த படத்தின் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் மகிழ்ச்சியில் கண்கலங்கினார்.

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts