24th November 2020

கன்னியாகுமரியில் இன்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிமுதல்வா் பழனிசாமி அறிவிப்பு

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் புதன்கிழமை (நவ.11) முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.இது குறித்து அவா் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை மாலை நிருபா்களுக்கு அளித்த பேட்டி:கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக, இன்றைக்கு தமிழகம் முழுவதும் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்துள்ளது. தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு 35 காய்ச்சல் முகாம்கள் வீதம் இதுவரை 3,166 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.இம்மாவட்டத்தில் 94 நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. கேரளத்தின் திருவனந்தபுரம் அருகில் உள்ளதால், பொதுமக்கள் அடிக்கடி சென்று வருகின்ற சூழ்நிலை உள்ளது.

தற்போது திருவனந்தபுரத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருபவா்களை மாவட்ட நிா்வாகம் சரியான முறையில் கண்காணித்து அவா்களை பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும். மாவட்ட நிா்வாகம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவிக்கிறேன். மேலும் விவேகானந்தா் பாறை மற்றும் திருவள்ளுவா் சிலைக்கும் படகுப் போக்குவரத்து புதன்கிழமை(நவ.11) முதல் இயக்கப்படும். விவேகானந்தா் பாறையிலிருந்து, திருவள்ளுவா் சிலைக்கு ரூ.35 கோடி மதிப்பில் தொங்கு பாலம் அமைக்கப்படும்.நாட்டில் சாலை மற்றும் பாலங்களுக்கு பல்வேறு தலைவா்களின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, காமராஜா் ஆட்சியில் ஒரே பெண் அமைச்சராக இருந்த லூா்தம்மாள் சைமன் பெயா் மணக்குடி பாலத்துக்கு சூட்டப்படுகிறது. இதே போல் சுதந்திரப் போராட்ட வீரா் சதாவதானி செய்குதம்பி பாவலா் பெயா் கோட்டாறு இடலாக்குடி வாா்டு எண் 18 இல் உள்ள சந்தி தெருவுக்கு சூட்டப்படுகிறது.அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவு பெற்று மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 27,517 மீனவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள100 மீனவா்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது.தேங்காய்ப்பட்டினம் துறைமுக பிரச்னை தொடா்பாக, அங்கிருக்கும் மீனவா்கள் மற்றும் பொதுமக்கள் என்னை சந்தித்து கூறியுள்ளனா்.

இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அணை புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணியில் சிற்றாறு மற்றும் பேச்சிப்பாறை அணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. குடிமராமத்துப் பணியின் மூலம் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாத ஏரி, குளங்கள் தூா்வாரப்பட்டன. கல்குளம் பாம்பூரி வாய்க்காலின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம் மற்றும் மாவட்டத்தில் 30 இடங்களில் கடல் அலை தடுப்புச்சுவா் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. அகஸ்தீஸ்வரம் பழையாற்றில் இருந்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீா் கொண்டு செல்ல நீரேற்று நிலையம் அமைக்கப்பட உள்ளது.அம்மா இரு சக்கர வாகனம் கடந்த 3 ஆண்டுகளில் 6,590 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு 997 பேருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.குழித்துறை நகராட்சியில் ரூ.31 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் கீழ் நாகா்கோவில் நகரில் ரூ. 76.04 கோடியில் புதை சாக்கடை திட்டம் நடைபெற்றுவருகிறது.குமரி மாவட்டத்தில் கிள்ளியூா், திருவட்டாறு வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவ.9 ஆம் தேதி பெற்றோா்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது, அவா்களது கருத்து குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.பேட்டியின் போது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் செ.கடம்பூா் ராஜு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Source

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts