‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு, பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ – எனக்கே மாற்றி அனுப்புகிறார்கள்-வைரமுத்து ட்வீட்

சமீப காலமாகவே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோல் விலை 90 ரூபாயைத் தொட்டுள்ளது. பெட்ரோல் விலையுயர்வால் மக்களின் அடிப்படை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உருவாகும் சூழலில், விலைவாசி ஏற்றம் குறித்த அச்ச உணர்வு அதுவும், இந்தக் கரோனா காலத்தில் மக்களிடையே மேலோங்கியுள்ளது என்றும் கூறலாம். இப்படிப்பட்ட நிலையில் அண்மையில் தமிழ் பாடல் வரிகள் மாற்றப்பட்டு, பெட்ரோல் விலையேற்றம் குறித்து மீம்ஸுகளாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து ட்வீட்ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள்: ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு, பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவுக்கு, வைரமுத்து எழுதிய மேலும் சில பாடல்களைப் பெட்ரோல் விலையுடன் ஒப்பிட்டு பாடல் வரிகளை மாற்றி எழுதி ரசிகர்கள் பெட்ரோல் விலையேற்ற வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

 

‘சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்

ஆஹா அவனே கொள்ளையனடி’

‘உசுரே போகுது உசுரே போகுது
பெட்ரோல் விலைய பார்க்கையிலே…’

‘ஒரு பொய்யாவதுசொல்கண்ணே
பெட்ரோல் விலை குறையும் என்று…’

 

Source:Nakkheeran

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts