14th April 2021

மயிலாடுதுறை அருகே தேர்தலில் பணியாற்றுவதற்காக கல்லூரியில் 2 ம் கட்ட பயிற்சி

மயிலாடுதுறை அருகே கல்லூரியில் தேர்தலில் பணியாற்றுவதற்கான 2 ம் கட்ட பயிற்சி

மயிலாடுதுறை அருகே தனியார் கல்லூரியில் தேர்தலில் பணியாற்றுவதற்கான 2 ம் கட்ட பயிற்சியில் கலந்து கொண்ட அரசு ஊழியர்களுக்கு தபால் ஒட்டு விண்ணப்பம் வழங்குவதற்கு அலைக்கழிப்பு : தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குழப்படி செய்ததாக அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு :-

மயிலாடுதுறை,பூம்புகார்,சீர்காழி ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஆசிரியர்கள்,அரசு அதிகாரிகள்,அரசு ஊழியர்களுக்குதேர்தல் 2 வது கட்ட பயிற்சி மன்னம்பந்தல்,செம்பனார்கோவில் ,சீர்காழி ஆகிய பகுதிகளில் தனியார் கல்லூரிகளில் நடந்தது.கொரோனா நோய் தொற்றுகாரணமாக ஊழியர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து பயிற்சி பெரும் வகையில் அதிக அளவிலான வகுப்பறையில் அமரவைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் மயிலாடுதுறை மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் நடந்த பயிற்சி முகாமில்;கலந்துகொண்ட அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுபோடுவதற்கான விண்ணப்பம் பேலட் ஊழியர்கள் இருந்த வகுப்பறைகளுக்கு அனுப்பாமல் பொதுவாக உள்ள ஒரு ஹாலுக்கு வரச்சொல்லியுள்ளனர்.அங்கு வந்ததும் தபால் ஓட்டு பேலட் சரிவர வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதோடு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அரசு ஊழியர்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்,அதனை தடுக்க வேண்டுமென்ற நோக்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் தபால் ஒட்டு பேலட் வழங்காமல் காலதாமதப்படுத்தி அலைக்கழிப்பதாக கூறி திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராம்சேயோன் தலைமையில் திமுகவினர்; மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.அதனையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசுஊழியர்கள் தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் பேலட்;உடனடியாக வழங்க ஏற்பாடு செய்தனர்.3 மணிநேரமாக அலைக்கழிக்கப்பட்ட ஆசிரியர்கள் தபால் ஓட்டை பெற்று சென்றனர்.ஒருசில ஆசிரியர்கள் தபால் ஓட்டை பதிவுசெய்து அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் தங்கள் ஓட்டை செய்தனர்.

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts