24th November 2020

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 ஆண்-பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இதில் சுமார் 5,500 பேர் தேர்வானார்கள். இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. நேற்றைய உடல் தகுதி தேர்வில் கலந்துகொள்ள 600 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகட்டிவ்’ என்ற சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டும் நேற்றைய தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு சரிபார்க்கப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாதவர்களுக்கு, உரிய சான்றிதழுடன் வந்தால் இன்னொரு நாளில் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 12-ந்தேதி வரை தொடர்ந்து உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீஸ் (வடக்கு) இணை கமிஷனர் பாண்டியன் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு சியாமளா உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

SOURCE

https://www.dailythanthi.com/News/Districts/2020/09/30232751/Physical-fitness-test-for-SubInspector-job-started.vpf

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts