29th November 2020

காவிரியை புனித நதியாக அறிவிக்கக் கோரி குடகு முதல் பூம்புகார் வரை யாத்திரை

காவிரியை புனித நதியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத துறவியர் பேரவை சார்பில் காவிரித் தாய் வழிபாடு யாத்திரை நடைபெறுகிறது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, குடகு மலையில் உற்பத்தியாகி பூம்புகார் வரை பாய்ந்தோடி கடலில் சங்கமிக்கும் காவிரி நதி தமிழக மக்களின் வாழ்வாதாரமாகும். கங்கை நதியை போல தென் கங்கை என புகழப்படும் காவிரியின் புனிதத்தை பாதுகாக்க வேண்டி ஆண்டுதோறும் ஜப்பசி மாதத்தில் காவிரித்தாய் வழிபாடு – யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.இந்த வருடமும் கடந்த மாதம் அக்டோபர் 21ஆம் தேதி குடகுமலை புறப்பட்ட யாத்திரை 7ஆம் தேதி பூம்புகார் வந்தடைகிறது. இந்த யாத்திரையில் இந்து மக்கள் கட்சியும் பங்கெடுத்து பல்வேறு பணிகளை செய்து வருகிறது. யாத்திரையானது குடகு மலையில் துவங்கி ஒக்கேனக்கல், ஈரோடு, கரூர், தஞ்சை, மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் நிறுவடையும். காவிரி கடலில் சங்கமிக்கும் கடற்கரையில் சிறப்பு பூஜைகளும், மகா ஆரத்தியும் நடைபெறும். காவிரி நதியை மலடாக்கி வரும் மணல் திருட்டை தடை செய்ய வேண்டும். காவிரியில் சாயக்கழிவுகளோ, சாக்கடை கழிவுகளோ கலப்பதை தடுக்க வேண்டும். காவிரிக்கரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கங்கையைப் போல காவிரியையும் புனித நதியாக அறிவிக்க வேண்டும், காவிரியின் தூய்மையை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த யாத்திரையில் துறவியர் பெருமக்களும், ஆதின கர்த்தர்களும், சிவனடியார்களும், விவசாயிகளும், பெண்களும் பெருமளவில் பங்கேற்கின்றனர். இவ்வாறு சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

SOURCE

More News

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்

admin See author's posts

குணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

admin See author's posts

திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை

admin See author's posts

’நிவர்’ புயலால், மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் சாலையில் வேருடன் சாய்ந்தது

admin See author's posts

கொள்ளிடம் அருகே, மழை நீரில் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

admin See author's posts

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts