நாட்டுப்புற கலைஞர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு- மாநாடு நடத்த திட்டம்

நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் தேர்தலை புறக்கணிப்பது எனவும், விரைவில் மாநாடு நடத்த வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளனர்.தமிழக நாடகம் மற்றும் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கூட்டமைப்பு அறிமுக விழா மற்றும் பொறுப்பாளர்கள் புதிய பதவி ஏற்பு விழா ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அறிமுக விழா கூட்டத்திற்கு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் காடை சத்யராஜ் தலைமை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் நாடகக் கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.இதுகுறித்து நம்மிடம் பேசிய காடை சத்யராஜ், ‘’கொரோனா காலத்தில் ஏப்ரல் மாதம் முதல் இதுவரை எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் இல்லாததால் அரசு நல வாரியத்தில் பதிவு பெற்ற 58 வயது உள்ள கலைஞர்களுக்கு இரண்டு மாதம் மட்டுமே ஆயிரம், ஆயிரம் ரூபாய் என 2000 ரூபாய் நிதி உதவி கிடைத்தது.

அதிலும் நிறைய கலைஞர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை. நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கும் இப்போது விண்ணப்பித்தவர்களுக்கும் மாதம் 3000 ரூபாய் பெறுவதற்கு அரசு வங்கி மூலம் உதவி செய்ய வேண்டும்.58 வயது முடிந்த நலிந்த கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியம் பெறாத வரை கண்டறிந்து அவர்களுக்கு மாதம் மூன்று ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பஸ் பாஸ் ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு அரசு அதிகாரிகள் எங்களை வேண்டும் என்றே அலைக்கழிக்கின்றனர். முறையாக பஸ், பாஸ் மற்றும் அடையாள அட்டைகள் அரசு வழங்குவதில்லை. ஓய்வூதிய அடையாள வழங்கும் முறைகளை அரசு எளிதாக்கி தரவேண்டும். சான்று வகையில் துவங்கவிருக்கும் எங்களை வேண்டும் என்றே அழைக்கின்றார்கள். அந்த முறைகளை எளிதாக்கி எங்களுக்கு உதவிட வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் அல்லது தேர்தலை புறக்கணிப்பது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம்.

இதற்காக தமிழக நாடகம் மற்றும் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் கூட்டமைப்பினர் விரைவில் ஒரு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் பெருவாரியான கலைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்’’ என்றார்.

SOURCE

More News

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலையில் பணி!

admin See author's posts

இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளை களைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்- அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

admin See author's posts

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts