28th February 2021

அரசு கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடையான நெல்லை அடிமாட்டு விலைக்கு வாங்கும் அவலம்; விவசாயிகள் குமுறல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 155 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா அறிவித்திருந்தார். நாட்கள் பல கடந்தும் இது நாள்வரை கொள்முதல் நிலையங்கள் திறந்தபாடில்லை. ஏற்கனவே நிவர் மற்றும் புரவி புயலால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி விவசாயம் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் பகுதி அளவிற்கு தண்ணீர் மூழ்கியதுடன் 80 சதவீத சேதமாகியது. இதற்கு தமிழக அரசு இடுபொருள் மான்யம் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் கிடைத்ததோ ஹெக்டேர் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 10 ஆயிரம் மட்டுமே. கேட்டால் பாதிப்பு சதவிகிதப்படி பிரித்து வழங்கியுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே நிவாரணம் கண்துடைப்பாகிப்போன நேரத்தில் 6 வது முறையாக பெய்த மழை அறுவடை சமயத்தில் மேலும் விவசாயிகளை பாதிப்படைய செய்தது. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கடந்த ஒரு வாரமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

ஏக்கர் ஒன்றுக்கு 75 மூடை மகசூல் கிடைப்பது வழக்கம். அதாவது ஏக்கர் ஒன்றுக்கு 1,500 கி.கி சராசரியாக மகசூல் கிடைத்து வருகிறது. தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காததால் தனியார் வியாபாரிகள் ரூ.15 கி.கி என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர். அரசும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தும் இதுநாள் வரை திறக்கவில்லை.

குறிப்பாக செம்பனார் கோவிலை ஒட்டியுள்ள திருச்சம்பள்ளி ஊராட்சியில் 100 ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தகையுடன் அறுவடை நடைபெற்று வருகிறது. 60 சதவீத அறுவடை முடிவடைந்துள்ளது. அணைத்து நெல்லையும் தனியார் வியாபாரிகள் அள்ளிச் சென்று விட்டனர். நெல் மூட்டைகளை காவல் காக்க இயலாததால் வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு நெல்லை தனியாரிடம் விற்பனை செய்யும் கொடுமை நிகழ்கிறது. அரசு உடனே திருச்சம்பள்ளி பகுதியில் அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts