பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி: அன்பில் மகேஷ் பேட்டி!

பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தோவு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது.

12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

தமிழக மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் பணிகள் மிக விரைவாக எடுக்கப்பட்டு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜூலை 31க்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே தமிழக பாடத்திட்டத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.

வருகிற 22 ஆம் தேதி மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மதிப்பெண் குறைவாக இருப்பதாக நினைக்கும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதிக்கொள்ளலாம்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,16,473. இதில் 30,600 பேர் 550-600 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் யாரும் இல்லை. மேலும், வகுப்புக்கு வராத 1,656 பேர் தேர்ச்சி பெறாதவர்களாக கணக்கிடப்பட்டுள்ளார்.

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்து தேர்வு எழுதாத பிளஸ் 1 மாணவர்கள் 1,650 பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள், தேர்வு எழுத முடியாதவர்கள், 39,000 தனித் தேர்வர்கள் ஆகியோருக்கு வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும் என்றார்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page