மயிலாடுதுறை சீர்காழி தென்பாதியில் பெண்கள் உட்பட 100கும் மேற்பட்ட பாமகவினர் பேரணியாக ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறை சீர்காழி தென்பாதியில் 20% இட ஒதுக்கீடு வேண்டி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் இணைந்து பெண்கள் உட்பட 100கும் மேற்பட்டார்கள் தென்பாதி மாரியம்மன் கோவிலிலிருந்து கிராம நிர்வாக அலுவலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு தங்கள் கோரிக்கைகளை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தனர். இதில் சீர்காழி நகர செயலாளர் கண்ணன் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கங்களை சேர்ந்த விஜயகுமார், வினோத், பாபு, அபினேஷ், சத்யா,சுபா,சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.