17th April 2021

பாமக தேர்தல் அறிக்கை!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு களமிறங்குகிறது பாட்டாளி மக்கள் கட்சி.

இந்நிலையில், பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தேர்தல் அறிக்கையை காணொளி காட்சி மூலமாக வெளியிட்டார். பாமக தேர்தல் அறிக்கையில், எஸ்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் இலவச கல்வி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை பாமக செலுத்தும் என்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப் டாப் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் பாமக தலைவர் ராமதாஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதே போல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் மாதம் ரூ.500 வழங்கப்படும்.

+1, +2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நிதியுதவி அளிக்கப்படும்.

தமிழகத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்படும்.

கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி ரூ.18,000லிருந்து ரூ.25,000 உயர்த்தப்படும்.

60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.

பொதுத் துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க் கடனில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடனுக்கு 15% மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2வது தலைநகராகத் திருச்சியும், 3வது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டின் தொழில் தலைநகரமாகக் கோயம்புத்தூர் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் அண்மையில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாவட்டங்களும் மறுசீரமைக்கப்படும். ஒரு மாவட்டத்தில் 12 இலட்சம் பேர் வாழும் வகையில் மாவட்ட மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு, மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.

மகளிருக்கான மகப்பேறு விடுப்புக்காலம் 12 மாதங்களுக்கு அதிகரிக்கப்படும்.

More News

நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் இரங்கல்

admin See author's posts

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts