20th January 2021

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால், பெட்ரோல், மருந்தகம் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை முதல் மாலைக்குள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், புதுவை அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிவர் புயலானது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்க கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை சமுதாயக்கூடம், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வருவாய்த்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புயலின் போது உயிர்சேதங்களை தடுப்பதற்காக, புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பால், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்கும் அன்பு அறக்கட்டளை சப்தமில்லாமல் சாதித்துவருகிறது.

admin See author's posts

வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

admin See author's posts

நாடு முழுவதும் 2,24,311 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

admin See author's posts

இந்திய ராணுவத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது பைக் ஆம்புலன்ஸ் சேவை

admin See author's posts

மயிலாடுதுறை பாண்டூர் கிராமத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவிகளை வழங்கினார் விஜிகே செந்தில்நாதன்

admin See author's posts

மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரயிலை முதல் நடை மேடையில் இருந்து இயக்க முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

கடலில் காற்றழுத்த தாழ்வு… மழை மேலும் வலுக்கும்..!

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- ஸ்டாலின்

admin See author's posts

லாரியை முந்தியபோது… பேருந்தில் பாய்ந்த மின்சாரம்! – 4 பேரை பலி கொண்ட சோகம்

admin See author's posts

பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே பிரைவசி பாலிசி மாற்றங்கள் பொருந்தும் – வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

admin See author's posts