புதுச்சேரியில் நாளை முதல் மதுப்பானக் கடைகளை திறக்க அரசு அனுமதி

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக் கடைகள் இயக்கப்படும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுபான கடைகளில் விற்பனை நடத்ததலாம்.

புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் முதல் இரண்டு நாட்கள் கூட்டம் இருக்கும் என்பதால் சமூக இடைவெளியை கண்காணிக்க காவல்துறை, கலால்துறை, வருவாய்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மதுபானத்திற்கு கொரோனா வரி கொண்டு வர அரசு முடிவு செய்யும். மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 31-ம் தேதிவரை புதுச்சேரியிலும் நீடிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஆட்டோக்களில் இருவரும் நான்கு சக்கர வாகனங்களில் 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். ஓட்டல்கள் இரவு 7 மணிவரை இயங்கலாம். ஆனால் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். 50 பேரை கொண்டு திருமணங்கள் நடை பெறலாம். இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். புதுச்சேரிக்குள் வாகனங்கள் செல்ல எந்தவித தடையும் இல்லை. புதுச்சேரிக்கும் காரைக்காலுக்கும் இடையே நிறுத்தம் இல்லாத பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்து.

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page