26th October 2021

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்கு உள்ளானார்கள் இதனால் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இப்பணிகள் முடிந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முருகப்பா, மங்கை சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

கொரோனா வைரஸ் தொற்று அச்சுருத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு திருக்கோயில்களின் நடை சாத்தப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத் துறை கீழ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. அந்த திருக்கோயில்களில் லட்சக்கணக்கான அர்ச்சகர்களும், ஓதுவார்களும் பணியாற்றிவருகிறார்கள்.

மேற்படி அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் பசி பட்டினியால் வாடி வருகிறார்கள். அவர்களுக்கு நிதி உதவி தமிழக அரசாங்கம் வழங்க வேண்டும். அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் சிறப்பு நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும் என மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page