மயிலாடுதுறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் ஆய்வு


மயிலாடுதுறை குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேரழுந்தூர், தொழுதலாங்குடி, மேலையூர், பெருமாள் கோவில் தென்பாதி, நச்சின்னார்குடி, கோழையூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கடுமையான மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பூம்புகார் சட்ட மன்ற அதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் கருத்துகளை கேட்டுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் மழை வெள்ளத்தால் முழுவதும் இடிந்த வீடுகளுக்கு உடனே அம்மா தொகுப்பு வீடு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார். மேலும் தேரழுந்தூர் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு சரி செய்து கொடுப்பேன் என்று உறுதியளித்தார். மற்றும் சாலைகளை பார்வையிட்டு புதுப்பிக்கப்படும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் குத்தாலம், அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் குத்தலாம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் குத்தாலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி துறை அதிகாரி ரெஜினாமேரி, மற்றும் அரசு அதிகாரிகள் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.