பொறையார் ராஜீவ்புரத்தில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையில் பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் அடிக்கல் நாட்டினார்


பொறையார் ராஜீவ்புரத்தில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையில் பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையர் ராஜீவ்புரத்தில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட கழக செயலாளருமான பவுன்ராஜ் அவர்கள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் அதிகாரிகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.