நட்சத்திர ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை


சின்னத்திரை உலகில் தொகுப்பாளராக அறிமுகமான சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் படப்பிடிப்பை முடித்து விட்டு நேற்று இரவு ஹோட்டலில் தங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸாருக்கு அதிகாலை 3 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சின்னத்திரை உலகில் தொகுப்பாளராக அறிமுகமாகி தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார், இவரின் இந்த திடீர் தற்கொலை சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.