26th November 2020

அஞ்சலக சேமிப்பு கணக்கு: குறைந்தபட்ச இருப்புத்தொகை உயா்த்த அறிவுறுத்தல்

அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயா்த்திக் கொள்ள அஞ்சல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, டிசம்பா் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுஅஞ்சலக சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50ஆக இருந்தது. இதை ரூ.500 ஆக உயா்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, இந்த விதிமுறை கடந்த ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.இந்நிலையில், ஏற்கெனவே சேமிப்பு கணக்கு தொடங்கியவா்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயா்த்திக் கொள்ள வரும் டிசம்பா் 11-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயா்த்தாத பட்சத்தில், வரும் மாா்ச் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளா் கணக்கில் இருந்து ரூ.100 கழிக்கப்படும். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ரூ.100கழிக்கப்பட்டு, இருப்புத் தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும். எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும் டிசம்பா் 11-ஆம் தேதிக்குள் உயா்த்திக் கொள்ள வேண்டும்.இந்த தகவல் சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts