25th September 2021

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்(PMEGP)!

புதிதாக தொழில்களைத் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில்முனைவோராக்கிடவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட தொழில் மையம்(DIC) மூலமாகவும், ஊரகப் பகுதிகளில் விண்ணப்பிப்பவர்கள் கதர் கிராம தொழில்கள் ஆணையம்(KVIC), கதர் கிராம தொழில்கள் வாரியம்(KVIB) மூலமாகவும், மற்றும் கயிறு சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கயிறு வாரியம்(COIR BOARD) மூலமாகவும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குறுந்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதன்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கடன் பெற தேவையான தகுதிகள்:

வயது                                –    18 வயதுக்கு மேல் கல்வித்தகுதி – உற்பத்தி தொழில் திட்ட மதிப்பீடு 10 லட்சத்துக்கு மேலும்
சேவைத் தொழில் திட்ட மதிப்பீடு 5 லட்சத்துக்கு மேலும் இருப்பின் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வருமான வரம்பு         – வருமான வரம்பு இல்லை.

அதிகபட்ச திட்ட மதிப்பீடு:

உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25.00 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், திட்ட மதிப்பீடாக வழங்கப்படுகிறது.

மேலும் திட்ட முதலீட்டில் விளிம்பு தொகையாக பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் (பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ பெண்கள்/ மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர்/ தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் ) 5 சதவீதமும் செலுத்த வேண்டும்.

நகரப்பகுதியில் பொதுப்பிரிவினருக்கு 15 சதவீதமும், ஊரக பகுதியில் 25 சதவீதமும், சிறப்புப் பிரிவினருக்கு நகரப்பகுதியில் 25 சதவீதமும், ஊரகப் பகுதியில் 35 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் அனைத்து லாபகரமான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த சுற்றுப்புற சூழலுக்கு நன்மை பயக்கும் தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை www.kviconline.gov.in/pmegp என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாகப்பட்டினம் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 8925533969 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page