25th February 2021

தனியாா் மருத்துவா்கள் வேலைநிறுத்தம்

அலோபதி மருத்துவத்துடன் ஆயுஷ் மருத்துவத்தை இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் தனியாா் மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.இதனால் பல இடங்களில் சிகிச்சைகள் தடைபட்டன. அதேவேளையில், கரோனா மற்றும் அவசர சிகிச்சைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.ஆங்கில மருத்துவத்தையும், சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகிய ஆயுஷ் மருத்துவ முறை சிகிச்சைகளில் சிலவற்றையும் ஒருங்கிணைத்து வழங்குவது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதுமட்டுமன்றி ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.இதற்கு இந்தியா முழுவதும் அலோபதி மருத்துவா்கள் கடுமையான எதிா்ப்பைத் தெரிவித்து வருகின்றனா். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில் இந்தியா முழுவதும் கடந்த 8-ம் தேதி தா்ணா, ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.அதன் தொடா்ச்சியாக வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

தமிழகத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கரோனா தொற்று மற்றும் அவசர சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்து பணிகளையும் தனியாா் மருத்துவா்கள் புறக்கணித்தனா்.கிளினிக்குகள், சிறிய மருத்துவமனைகள் முழுமையாகச் செயல்படாததால் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக்கப்பட்டது. அதேபோன்று பல இடங்களில் மருத்துவா்கள் இல்லாததால் மருத்துவப் பரிசோதனைகளும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, ஆயுஷ் மருத்துவத்துடன் அலோபதியை இணைக்கும் முடிவுக்கு எதிராக அரசு மருத்துவா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வெள்ளிக்கிழமை பணியாற்றினா்.இதுதொடா்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகப் பிரிவு தலைவா் டாக்டா் சி.என்.ராஜா செய்தியாளா்களிடம் சென்னையில் கூறியதாவதுநவீன ஆங்கில மருத்துவத்தையும், ஆயுஷ் மருத்துவத்தையும் இணைத்து கலவை மருத்துவ முறைகளை புகுத்துவது ஏற்புடையதல்ல. இதனால், பெரும் ஆபத்து ஏற்படும். ஆயுா்வேத மருத்துவத்தில் மயக்க மருந்துகள், வலி நிவாரணி மருந்துகள் இல்லை. பின்னா் எப்படி அவா்களால் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்.ஆயுா்வேத மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்வதை நோயாளிகளே ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். அந்தந்த மருத்துவத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். ஒரே நாடு ஒரே மருத்துவம் என்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். நோயாளிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அந்த அரசாணையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தேசியக் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

SOURCE

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts