26th October 2021

மசினகுடியில் உலாவரும் புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு; வழக்கு நாளை விசாரணை!

நீலகிரி: மசினகுடி அருகே 4 பேரை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் வனத்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கும்கி யானைகள் உதவியுடன் புலியை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.நீலகிரி மாவட்டம் மசினகுடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 4 பேரை தாக்கிக்கொன்ற புலியை, ‘டி-23’ என வனத்துறையினர் அடையாளப்படுத்தி, தேடி வருகின்றனர். இதன் உடலில் உள்ள வரிகள் தானியங்கி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேடுதல் பணிக்காக, தெப்பக்காடு- மசினகுடி சாலையில், தற்போது வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, வனத்துறையினர் தெரிவித்ததாவது: புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

வன விலங்கு பாதுகாப்பு சட்டப்படி புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேடுதல், பொறிவைத்துப் பிடித்தல், அமைதிப்படுத்துதல் நடவடிக்கைகள் பலன் தராத நிலையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய சூழலில் புலியை பிடிக்கவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தேடப்படும் புலிக்கு, 14 வயது இருக்கும்.மனிதரின் கைரேகை எவ்வாறு ஒரேமாதிரி இருக்காதோ, அதேபோல புலியின் உடலில் உள்ள வரிகளும், ஒவ்வொரு புலிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

கால்தடங்களும் வேறுபடும். புலிகள் கணக்கெடுப்பில், அதன் வரிகள், கால்தடங்களை வைத்துத்தான் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. ‘டி-23’ புலியின் உடலில் உள்ள வரிகள், தேடுதல் குழுவினருக்கு முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. பிரத்யேகப்பயிற்சி பெற்ற 20 பேர் அடங்கிய ஐந்து அதிரடிப்படைக் குழுவினர் புலியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு தெரிவித்தனர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: ஒரு புலியை சுட்டுக்கொல்ல அனுமதி வாங்கிவிட்டு வேறு புலியை சுட்டுக்கொல்லவும் வாய்ப்பு உள்ளது. இந்த தவறு நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கேட்டால், அந்தப்புலிதான் இது என்பார்கள். மனிதர்கள் அடுத்த தலைமுறைக்குகூட சொத்து சேர்த்து வைத்திருக்கின்றனர்.

புலிக்கு தேவை அடுத்தவேளை உணவுதான். அதுகிடைத்துவிட்டால், அருகில் இருக்கும் இரையைக்கூட புலி தாக்காது. புலி எண்ணிக்கையில் குறைந்துவரும் இனம் என்பதால், அதை சுட்டுக் கொல்லக்கூடாது. மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்வனத்தில் கொண்டுபோய் விட வேண்டும்.

புலிகளின் எண்ணிக்கையை காப்பாற்ற மத்திய அரசு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் செலவு செய்கிறது. எனவே, புலியையும் காப்பாற்ற வேண்டும். மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதுபோன்ற நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுதொடர்பாக புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கும்கி யானைகள் மீது அமர்ந்து புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page