அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் மயிலாடுதுறை RDO அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.




மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் கலந்து கொண்டு போராட்டம் குறித்து உரையாடினார். பழைய ஓய்வூதிய முறை, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் திடிரென்று 6வது நாளான இன்று காலை சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.