27th February 2021

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 118 செயலிகள் இந்தியாவின் இறையாண்மை ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த செயலிகள் மூலம் பயனர்களிள் தரவுகள் மற்ற நாடுகளுக்கு பகிரப்படுவது தெரியவந்தது. அத்துடன் இந்த செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சைபர் கிரைம் மையமும் பரிந்துரை செய்தது.

‘பப்ஜி’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமீபத்தில் மறைந்த காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது எச்.வசந்தகுமார், “வலைதள விளையாட்டுகள் பள்ளி குழந்தைகளின் கவனத்தை வேறு திசையில் கொண்டு செல்கின்றன என்று பெருவாரியான பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உடல் பருமன், இருதய நோய், உளவியல் கோளாறுகள் போன்ற சுகாதார சீர்கேடுகள் இளைய சமுதாயத்தை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. 100-க்கும் மேலான இளைஞர்களின் உயிரை ‘புளூவேல்’ வலைதள விளையாட்டு குடித்துள்ளது. ஆகவே ‘புளூவேல்’ மற்றும் ‘பப்ஜி’ போன்ற வலைதள விளையாட்டுகளை அரசு உடனடியாக தடை செய்யவேண்டும்” என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SOURCE

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

Leave a Reply